எஸ். தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இண்டெர்வியூ வாசுதேவநல்லூர் , எஸ். தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 ஆண்டுளாக 100% வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் இருந்து கல்லூரியில் கேம்பஸ் இண்டெர்வியூ நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள இகாரஸி மோட்டார்ஸ் லிமிட்டெட் கம்பெனி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு கேம்பஸ் இன்டெர்வியூவை நடத்தியது. இகாரஸி மோட்டார்ஸ் லிமிடெட் கம்பெனி மனித வளத்துறை அலுவலர்கள் திரு.
பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு கேம்பஸ் இன்டெர்வியூயை நடத்தினார்.
மாணவிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தினர். இதில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிகல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடந்த வளாக நேர் முகத் தேர்வில் சுமார் 40 மாணவிகள் கலந்து கொண்டனர். 36 மாணவிகள் பணி நியமன ஆணையை பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் திரு. எஸ். தங்கப்பழம் அவர்கள் மற்றும் தாளாளர் திரு. எஸ். டி. முருகேசன் ஆகியோர் பாராட்டினர் , கல்லூரி முதல்வர் திரு. தமிழ்வீரன் அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கினார்கள்.
வளாகத்தேர்வு ஏற்பாடுகளை மனித வள துறை அலுவலகர் திருமதி. பொன் சுவிதா அவர்களும் துறைத் தலைவர் திரு. பாலமுருகன் அவர்களும் செய்திருந்தனர்.